Home Tags Jaffnanews

Tag: jaffnanews

வட்டு இளைஞன் படுகொலை ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காண்பித்த மனைவி-oneindia news

வட்டு இளைஞன் படுகொலை ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காண்பித்த மனைவி

0
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் 06 பேரை கைது செய்துள்ளனர். […]
தொடரும் அடிப்படை உரிமை மீறல்கள்!! மனிதவுரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு பதிவு-oneindia news

தொடரும் அடிப்படை உரிமை மீறல்கள்!! மனிதவுரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு பதிவு

0
வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டு உரிமை, உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் அன்றைய தினம் சிவராத்திரி வழிபாடுகளிற்குச் சென்றிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் இலங்கை மனிதவுரிமை ஆணைகுழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (20) முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது. சிவராத்திரி தினத்தன்று பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் வழிபாடுகளிற்காகச் சென்றிருந்த நிலையில் நீண்ட நேரம் வழிபாடாற்றுவதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு, செல்லும் பாதைகளெங்கும் […]
கஞ்சா கலந்த பீடியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுளைந்தவர் மாட்டினார்-oneindia news

கஞ்சா கலந்த பீடியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுளைந்தவர் மாட்டினார்

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவாலாளிகள் பரிசோதித்தபோது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவரிற்கு நேர்ந்த கதி - படங்கள்-oneindia news

சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவரிற்கு நேர்ந்த கதி – படங்கள்

0
இன்றையதினம் சேந்தாங்குளம் கடலில் குளிப்பதற்கு வந்த மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டது. தங்கன்குளம் செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (வயது 37), மற்றும் சிவனேசன் திபிசன் என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணி […]
யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்-oneindia news

யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்

0
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது. இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மைக்கல் நேசக்கரம் ஊடாக நீர் தொட்டி கையளிப்பு!(படங்கள் இணைப்பு)-oneindia news

மைக்கல் நேசக்கரம் ஊடாக நீர் தொட்டி கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

0
வட்டுவத்தை பகுதியில் நீண்டகாலமாக வீட்டில் நீர் தொட்டியின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு வந்த குடும்பத்திற்கு எம் கெருடாவில் கிராமத்தைபிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் திரு – நாகலிங்கம் நாகபாஸ்கரன்அவர்களின் நிதிப்பங்களிப்புடன் நீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மைக்கல் நேசக்கரம் ஊடாக குறித்த நீர்த்தொட்டி பயனாளியிடம் இன்று 18.03.2024 கையளிக்கப்பட்டது.
மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!-oneindia news

மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!

0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் கதிர்;வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாததையடுத்து வைத்தியசாலையின் அசமந்த போக்கே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (18) காலை வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த வைத்தியசாலையின் கதிர்வீச்சு சிகிச்சைக்காக திருகோணமலை. அம்பாறை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து நோய்க்கான சிகிச்சையை பெறுவதற்காக அதிகமான நோயாளர்கள் வருவது வழமை இந்த நிலையில் குறித்த கதிர்வீச்சு இயந்திரம் […]
பிறந்ததனத்தில் இரு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!(படங்கள் இணைப்பு)-oneindia news

பிறந்ததனத்தில் இரு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!(படங்கள் இணைப்பு)

0
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்ப்பாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. 18.03.2024 இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் மயிலிட்டியைச் சேர்ந்த சகோதரி இன்பராசா அஐந்தா தம்பதிகளின் புதல்வி இ.றொவேனா அவர்களின் நிதிப்பங்களிப்பில் கல்வி கற்கின்ற 2மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது. யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் இன்று (18) பருத்தித்துறையில் அமைந்துள்ள ஊடக இல்ல அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி கொமர்சல் வங்கியில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை இன்று இடம்பெற்றது!(படங்கள் இணைப்பு)-oneindia news

திருநெல்வேலி கொமர்சல் வங்கியில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை இன்று இடம்பெற்றது!(படங்கள் இணைப்பு)

0
மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக கொமர்சல் வங்கியின் “அனகி” செயற்றிட்டத்திற்கு அமைய இன்றைய தினம் பெண்களுக்கான இலவசமாக மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. திருநெல்வேலி கொமர்சல் வங்கி முகாமையாளரின் நெறிப்படுத்தலில் ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இலவச மருத்துவ பரிசோதனையின்போது குருதி அமுக்கம், பி.எம்.ஐ அளவு, இரத்தப் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்பட்டன. வங்கி கிளை மற்றும் ஏ.ரி.எம் சேவையினை பெறுவதற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் இந்த இலவச பரிசோதனையினால் நன்மையடைந்தனர். இதற்கு டேடன்ஸ் மருத்து பரிசோதனை நிலையமும் அனுசரணை வழங்கியிருந்தது. […]
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!-oneindia news

வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

0
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மார்ச் 19ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]

RECENT POST