Tag: mannar
வீதிக்கு வந்து பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் ,கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர் இன்றைய தினம் (7) காலை பாடசாலைக்கு முன் குறித்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்றி கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்வதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. […]
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று (7) மதியம் இடம் பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (5) காலமானார். இந்நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. புதன்கிழமை இன்று(7) காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் […]
செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று புதன்கிழமை மதியம் இடம் பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார். இந்த நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் […]
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க – மன்னார் கள்ளியடி மக்கள் கோரிக்கை.!
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்துள்ளனர்.மேலும் கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமல் கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்கு மடு வலயக் கல்விப் பணிப்பாளரின் செயல்திறனற்ற தன்மையே காரணம் என கள்ளியடி கிராம மக்கள், பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு கல்வி வலயத்திற்கு […]
செல்வம் எம்.பியின் தாயாரின் பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினர் அஞ்சலி.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை(5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. -இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை புதன்கிழமை (7) காலை தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு […]
7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிசார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் […]
மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு..!
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமையில்...
பொதுச் சின்னத்தில் இணையத் தயார்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. !
தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாராக உள்ளோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மன்னாரில்...
வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட காணியை வனத்துறை விடுவிக்காமைக்கு எதிர்ப்பு
எட்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மன்னார் பிரதேச மக்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பிரதேச...
திருகேதீஸ்வரத்தில் சிவராத்திரி முன்னாயத்தக் கூட்டம்!
மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தில், இந்தவருட மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் நேற்று(31) மாலை மன்னார் மாவட்டச் செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ...