Home இலங்கை செய்திகள் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் 2023 – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த விண்ணப்பம் ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தை தரம் 05 இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடம் பெற்று முறைப்படி பூர்த்தி செய்து 2024.03.07 திகதிக்கு முன்னர் அதே பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version