Home jaffna news அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்தம் – உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கும் பயணிகள்!

அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்தம் – உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கும் பயணிகள்!

அண்மைக் காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிர்களும் பறிபோயுள்ளன.

இந்நிலையில் இன்றையதினம் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டன.

இதன்போது பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எத்தனையோ விபத்துக்கள இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்தம் - உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கும் பயணிகள்!-oneindia news

Exit mobile version