இனிமேல் கட்சி எந்த பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குகொள்ள மாட்டேன் அதனைத் தவிர்த்து கொள்வேன். பலராலும் பரிகசிக்கப்படுகிற நிலைக்கு வந்துள்ளோம். இதில் யார் சரி பிழை என்பற்கப்பால் போட்டிகள் தவிர்க்கபட வேண்டும். கட்சிக்குள் பிளவுபட விடாமல் செயற்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி பேசுபொருளாக அமைந்துள்ளது. இந்த வருடம் தேர்தல் காலம் என்பதால் இப்போது அதைப் பற்றியே பலரும் பேசி வருகின்றனர்.
கட்சியின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகமொன்று தெரிவு செய்யப்படுகின்ற போது கட்சியின் அனைத்து பொறுப்புக்களும் தலைவரிடமே இருக்கும்.
ஆனாலும் தலைவரது பணிப்பிற்கமைய நிர்வாக கடமைகளை செயற்படுத்துகிற ஒருவராகவே செயலாளர் இருப்பார். அதனை விடுத்து செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றே கட்சி யாப்பிலும் இருக்கிறது.
எங்களது கட்சி யாப்பை பொறுத்த வரையில் ஆலோசனை கூறுவதும் வழிநடத்துவதும் தலைவர் தான். நிர்வாகத்தை செய்கிற ஒருவராகவே செயலாளர் பதவி இருக்கும்.
இதனை இங்கு நான் கூறுகிறேன் என்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் நியமனத்தை கட்சித் தலைவருடன் கலந்தாலோசிக்காமல் செயலாளர் ஒருவருக்கு வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது.
அதன் காரணமாக செயலாளர் பதவி வகிப்பது தொடர்பில் பலதரப்பட்ட பார்வைகள் எண்ணங்களும் ஏற்பட்டு இருக்கலாம். உண்மையில் கட்சியில் பிரதேசவாதம் அல்லது பிரிவு பிளவு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த தேசியபட்டியல் நியமனத்தை பெரியதொரு பிரச்சனையாக யாரும் கருதவில்லை.
இதனாலேயே செயலாளர் பதவி அல்லது நியமனம் அல்லது தெரிவு என்று கூறிக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதப் பொருளாக்கி பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே கட்சியின் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானவரும் தீர்மானமெடுப்பவரும் தலைவர் தான். இது தான் நடைமுறை என்பதால் கட்சித் தலைவரை மீறி யாரும் செயற்பட முடியாது என்பதைத் தான் யாப்பிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எமது கட்சியை பொறுத்த வரையில் நீண்ட நெடிய பாரம்பரிய ஒரு கட்சியாக இருக்கிறது. இந்தக் கட்சி பதவிகளுக்கு முன்னெப்போதும் போட்டி என்ற நிலை வந்ததில்லை. ஆனால் இப்போது போட்டியை எதிர்கொண்டதால் தான் பல்வேறு பிரிவினைகள் ஏற்பட்டுள்ளன. கட்சியின் இன்றைய நிலைமைள் மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.
ஐனநாயகம் என்ற போர்வையில் போட்டிகள் ஏற்படுவது பிளவுகளையே ஏற்படுத்தும். எனவே போட்டி இருந்தாலும் பிளவுகள் மேலோங்குவது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். ஆகையனால்
போட்டி இல்லாத நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
எமது கட்சி ஒருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கிற போது ஆதற்கு நீதிமன்றம் போனாலும் பதவி நிலைகளுக்கு
நீதிமன்றுக்கு போகவில்லை. ஆனாலும் இப்போது நீதீமன்றம் வரை சென்றிருப்பது வருந்தத்தக்கது. உண்மையில் ஐனநாயகம் என்று சொல்லிக் கொண்டு இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இனிமேல் கட்சி எந்த பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குகொள்ள மாட்டேன் அதனைத் தவிர்த்து கொள்வேன். பலராலும் பரிகசிக்கப்படுகிற நிலைக்கு வந்துள்ளோம். இதில் யார் சரி பிழை என்பதற்கப்பால் போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்சிக்குள் பிளவுபட விடாமல் செயற்பட வேண்டும்.
எங்களது கட்சி விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளமையால் இன்றைய நிலைமையில் மிக இக்கட்டான கட்டத்திலேயே கட்சி இருக்கிறது.
இதனை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலைமை தொடர்வது கட்சியை மேலும் பாதிக்கும் என்பது தான் உண்மை.
ஆனாலும் இந்த நிலை தொடர்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கின்றன. ஏனெனில் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புக்கள் தற்போது இருப்பதாகவே நம்புகிறேன். எனினும் அடுத்து நடைபெறவுள்ள பேச்சுக்களின் போது இணக்கப்பாடில்லாத நிலை தொடர்ந்தால் கட்சி பிளவுபடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.
மேலும் நடைபெற்ற கூட்டத்திலும் கூட்டத் தெரிவுகளிலும் சிறு தவறுகள் நடந்து தான் இருக்கின்றன. அதற்காக யாரும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றில்லை. உட் கட்சி விவகாரங்களை கட்சிக்குள்ளேயே கலந்து பேசி சமூகமான முறையில் தீர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.
கட்சியின் இன்றைய நிலைமை தெற்கிற்கு மிக மகிழ்ச்சி. கட்சிக்குள் இப்போது ஏற்பட்டிருக்கிற பிரச்சனைகளுக்கு யாரின் தூண்டுதல் ஏதோது இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒன்றாக இருந்தவர்கள் இப்போது ஏன் இப்படி செயற்படுகிறார்கள் எனத் தெரியவில்லை.
இந்தநிலை தொடருமானால் கட்சி பிளவுபடும் நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது. அது ஆரோக்கியம் அல்ல. பாரம்பரிய கட்சியாக இருக்கிற இந்த கட்சியில் சில தவறுகள் ஏற்பட்டு இருக்கிறது. அதை திருத்தி கொண்ட சென்றால் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லலாம்.
ஐனநாயகம் பற்றி பேசுகிற எந்த பெரிய கட்சியாலாவது இப்படி ஐனநாயகம் இருக்கிறதா. ஆனால் எங்கள் கட்சியில் பெரிய ஐனநாயகம் இருக்கு என்று பேசி கொண்டு ஐனநாயக அழிவுக்கு கட்சியை கொண்டுவந்து விட்டுள்ளனர்.
இது சிவில் வழக்கு இது எவ்வளவு காலம் இழுபடும் என்று சொல்லத் தெரியவில்லை. ஆகையனால் ஏதோவொரு வகையில் உடன்பாட்டுக்கு வரவேண்டும். தற்போது கட்சியில் இரண்டு அணியல்ல பல அணிகளாக இருக்கின்றனர்.
ஐனநாயக ரீதியான கட்சி என்றால் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த முரண்பாடுகள் எப்போதும் ஆரோக்கியமானமாக அமைய வேண்டும். முரண்பாடுகள் என்பது எங்கள் கட்சியில் மட்டுமல்ல எல்லா இடமும் இருக்கிறது தானே.
எனவே முரண்பாடுகளை களைந்து சரி பிழைகளை ஏற்றுக் கொண்டு சுமூகமாக பேசித் தீர்க்க வேண்டும். விடாக்கண்டன் கொடாக்கண்டனாக செயற்படாமல் விட்டுக் கொடுத்து செயற்பட வேண்டும்.
எங்களுடைய கட்சியின் தலைவர் சிறிதரன் தான். அவரே இந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம். அதே போன்று கட்சி நலன் கருதி நீதிமன்றம் செல்வதையும் மற்றைய தரப்பினர்கள் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு செல்லாமல் விட்டிருந்தால் என்னைப் பொருத்தவரையில் அன்றைய கூட்டத்தின் பிரகாரம் தலைவர் செயலாளர் தெரிவில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆகவே எல்லாவற்றிற்கும் மனம் வேண்டும். தன்னலம் சுயநலம் பற்றி கதைத்தால் எதுவும் கஸ்ரம்.
பிரச்சனையை சமூகமாக தீர்க்க துணிவு தைரியம். வேண்டும். வெறுமனே கற்பனையில் கற்பிதம் செய்வது தான் இந்த நிலை.
எனவே எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் இருக்கிறது. இதில் பேசித் தீர்த்து சமூகமான தீர்வை ஏற்படுத்தலாம். சரிபிழைகளுக்கப்பால் கட்சி நலன் கருதி அனைவரும் செயற்பட வேண்டியது அவசியம் – என்றார்.