Home இலங்கை செய்திகள் இலங்கையை உலுக்கிய கோர விபத்து-பெண் பலி -பலர் காயம்..!

இலங்கையை உலுக்கிய கோர விபத்து-பெண் பலி -பலர் காயம்..!

தங்காலை மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்தார்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 11 மாத குழந்தை ஆகியோர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version