Home Accident news இலங்கையை உலுக்கிய கோர விபத்து-10 பேருக்கு நேர்ந்த கதி..!

இலங்கையை உலுக்கிய கோர விபத்து-10 பேருக்கு நேர்ந்த கதி..!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பயணித்த வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,

இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றும் இவ்விபத்தில் சிக்கியுள்ளன.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேனை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேன் முன்னால் சென்ற லொறியை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலும் விபத்தில் வேனும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version