23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றையதினம், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது.