இளைஞர்களுக்கு வழி விடுங்கள்-சரவணபவன் கோரிக்கை..!
நான் உட்பட வயதில் மூத்தவர்கள் தேசியத்தின் பால் மிக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு வழிவிடுவதோடு இளைஞர்களது கையில் தமிழ் தேசியத்தை கையளிக்கவேண்டும் என நடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் உலக தமிழ் மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு 25/2/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் இடம்பெற்றது இதன்பொழுது சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் நிறுவுனருமான ஈ.சரவணபவன் அவர்கள் உரையாற்றுகையில் அருகிச் செல்வதை நினைவூட்டுவதற்கும் அதை தக்க வைப்பதற்கும் சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுகின்றன தமிழ் தேசிய எழுச்சி நாளும் அந்த வகைக்குள் அடங்கிவிடக்கூடாது எப்போது அந்த வகைக்குள் அது அடங்கி விடுகின்றதோ அன்றே இந்த பூமியில் தமிழன் என்ற இனம் இல்லாமல் போய்விடும்
நீங்கள் எல்லோரும் அஞ்சல் ஓட்டத்தை பார்த்திருப்பீர்கள் ஒருவர் கையில் அஞ்சல் கோலைக் கொண்டு வந்து கொடுப்பார் மற்றையவர் அதைப் பெற்றுக் கொண்டு ஓடுவார் அவர் இன்னொருவரிடம் கொடுப்பார் இப்படி வெற்றியிலக்கை அடையும் வரையில் ஒருவர் இன்னொருவரிடம் அஞ்சல் கோலை பரிமாறிக்கொண்டே இருப்பார்கள் அதைப் போலத்தான் நாமும் சில விடயங்களை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும் அவர்கள் அதைக் கொண்டு ஓடுவார்கள் அஞ்சல் கோலை உரிய வகையில் அடுத்தவரிடம் ஒப்படைக்காவிட்டால் தோல்வியில் முடிந்துவிடும்.
இன்றைய இளம் சமுதாயத்தை நோக்கி எல்லோரும் குற்றம் சுமத்துகின்றனர் தமிழ் தேசிய பாதையிலிருந்து அவர்கள் விலகிவிட்டார்கள் என்று கூறுகின்றனர் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள் மதுபாவனைக்கு அடிமையாகிவிட்டார்கள் மதுபாவனைக்கு அடிமையாகிவிட்டார்கள்
வாள்வெட்டுகளிலும் குழு மோதல்களிலும் ஈடுபடுகின்றார்கள் என்று இளம் சமுதாயத்துக்கு எதிராக குற்றப்பட்டோலை வாசிக்கின்றனர் சிங்களத் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த தடவை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வென்றிருந்தார் அவரது வெற்றிக்குப் பின்னால் பல இளைஞர்கள் இருந்திருக்கின்றார்கள்.
தமிழ் தேசியத்தை அந்த இளைஞர்கள் தொலைத்துவிட்டார்களா வேலை வாய்ப்புக்கும் அபிவிருத்திக்கும் தமிழ் தேசியத்தை அடகு வைத்துவிட்டார்களா இணக்க அரசியலுக்கு முன்னால் தமிழ்த் தேசியம் மண்டியிட்டுவிட்டதா இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.
இங்கே இளைஞர்கள் மீது குற்றம் சுமத்த முன்னர் அவர்களிடம் தமிழ்த் தேசியம் என்கின்ற அஞ்சல் கோலை நாம் கையளித்திருக்கின்றோமா என்ற கேள்வி பிரதானமானது அடுத்த தலைமுறைக்கு தமிழ் தேசியத்தை ஊட்டி வளர்த்திருக்கின்றோமா தமிழ்த் தேசியப் பற்றுடன் இருந்த நாம் அந்த வழியில் இளைஞர்களை பயணிக்கத் செய்திருக்கின்றோமா இளைஞர்களால் தான் தமிழ் தேசியம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது அவர்கள் தங்கள் கைகளில் தமிழ் தேசியத்தை எடுத்தால் மாத்திரம் தான் எம்மால் விடிவை நோக்கி நகர முடியும்.
இலங்கை தமிழரசுக் கட்சி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றியீட்டியது தமிழ் தேசியத்தை நோக்கி இளைஞர்களை திரட்சியாக்கிய ஒன்றாக அதைச் சொல்லலாம் இளைஞர்கள் தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாக வரிந்து கொண்டார்கள்
அதற்காக தமது உயிரைக் கொடுக்கவும் துணிந்தார்கள் இளைஞர்களுக்கு அந்த பாதை காட்டிய எங்கள் தலைவர்கள் பின்னர் தடுமாறியபோதும் இளைஞர்கள் தங்கள் கொள்கைகளில் இருந்து விலகவில்லை அதில் உறுதியாக இருந்தார்கள் தமிழ்த் தேசியத்தை நிலைகதெதூஊ நிறுத்துவதில் அன்றைய இளைஞர்களின் பங்குதான் அளப்பரியது.
இப்போதும் அதேதான் நடக்கின்றது அன்று இளைஞர்களாக இருந்த நாம் தான் இன்று அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம் நாங்கள் சரியான முறையில் எங்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றோமா இப்போதும் வயதில் மூத்தவர்கள் கையில் தான் அரசியல் இருக்கிறது
இதில் என்னை விடுத்து நான் சொல்லவில்லை வயதில் மூத்தவர்கள் கையில் அரசியல் இருப்பதால் தான் என்னவோ தமிழ்த் தேசியம் சிதைவடைகின்றதோ தெரியவில்லை இளைஞர்களுக்கு தமிழ்த் தேசிய இரத்தம் பாய்ச்சி அவர்களை புத்துணர்வு ஊட்ட வேண்டிய அரசியல் முதியவர்கள் இணக்க அரசியல் பாதையையும் தெளிவில்லாத இலக்கையும்எெஅஅஅஅீெஎ வைத்திருப்பதால் தான் இன்றைய இளைஞர்கள் தமிழ் தேசியப் பாதையில் பயணிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்
எங்கள் வயதில் மூத்த தலைவர்கள் தேசியத்தின்பால் மிக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு வழி விடுவதுதான் நல்லது அவர்களின் கைகளுக்கு தமிழ்த் தேசியம் செல்லும் ஆக இருந்தால் மீண்டும் புத்தூக்கத்துடன் அது நகரத் தொடங்கும்.
1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் என்ன நடந்ததோ அதேபோன்று இளைஞர்களின் கைகளில் எல்லாவற்றையும் ஒப்படைத்து நாம் ஒதுங்கிக் கொண்டால் தமிழ்த் தேசியம் எழுச்சியடையும்.
நான் ஊடக நிறுவனத்தின் நிறுவுனர் எனது நிறுவனமும் தமிழ்த் தேசியத்தையே இலட்சியமாக வரிந்துகொண்டு இன்றுவரை அதன் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது அவ்வாறு அது பயணிப்பதற்குக் காரணம் நான் பத்திரிக்கையின் செல்நெறியில் தலையிடாமல் இருப்பதுதான். அதற்காக நான் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமானவன் என்ற அர்த்தமல்ல அடுத்த தலைமுறைகளின் கைகளில் ஒப்படைத்திருந்தால்தான் தமிழ்த் தேசியத்தை உறுதியாக வைத்திருக்கின்றார்கள்
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய எழுச்சி நாள் என்பது ஒரு நாளில் முடிந்துவிடும் விடயமாகிவிடக்கூடாது இது இளைஞர்களிடையே விடுதலைப் பொறியை தமிழ்த் தேசிய எழுச்சியை விதைக்க வேண்டும் இளைஞர்களை மீண்டும் தமிழ்த் தேசியப் பாதையில் திரட்சியாக்க வேண்டும் அதற்கு முதியவர்கள் வழிவிட வேண்டும் அதன் பின்னர் தமிழ் தேசிய எழுச்சி என்பது தானாகவே உருவாகும் என தெரிவித்தார்.