உலகம் முழுவதும் செயலிழந்த பேஸ்புக்..!

உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனம் பெரிய செயலிழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் பயனர்கள் X தளத்தில் எழுதியுள்ளனர்.

செயலிழப்பு குறித்து டவுன் டிடெக்டரில் 2,000க்கும் மேற்பட்ட அறிக்கைகள் காணப்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்குள், இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து கிட்டத்தட்ட 5,000 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பெரும்பாலான அறிக்கைகள் லண்டன், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூலில் இருந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தாய்லாந்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேஸ்புக் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி பேஸ்புக் அதன் துணை செயழிகளான Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகியவை ஏழு மணி நேரம் 11 நிமிடங்களுக்கு கடுமையான செயலிழப்பை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.