Home jaffna news எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது!

இன்று அதிகாலை, எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version