Home சினிமா செய்திகள் ‘குட் பேட் அக்லி’: 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் ஆங்கில டைட்டில்!

‘குட் பேட் அக்லி’: 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் ஆங்கில டைட்டில்!

22 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

அஜித்தின் 63-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (மார்ச் 15) வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்துக்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘வில்லன்’ மற்றும் ‘ரெட்’ ஆகிய படங்களுக்கு ஆங்கில தலைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதன் பிறகு, ’அட்டகாசம்’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அசல்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ‘வலிமை’, ‘துணிவு’ என ஆங்கில தலைப்பை தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Exit mobile version