Home jaffna news கனகசிங்கம் பத்மாவதி நினைவாக வற்றாப்பளையில் சந்நிதியான் ஆ்சிரமத்தால் வீடு கையளிப்பு…!

கனகசிங்கம் பத்மாவதி நினைவாக வற்றாப்பளையில் சந்நிதியான் ஆ்சிரமத்தால் வீடு கையளிப்பு…!

காரை நகரை சேர்ந்த கனகசிங்கம் பத்மாவதி நினைவாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டு அது இன்று கையளிக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு அங்கு பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு வீட்டை சம்பிரதாய பூர்வமாக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திறந்து வைத்து வீட்டு உரிமையாளரிடம் திறப்பை கையளித்தார்.

குறித்த பயனாளியின் ஐந்து பேர் கொண்ட குடும்பம் சிறிய பாதுகாப்பற்ற ஓலை குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்த நிலையிலேயே வற்றாப்பளை கிராம அமைப்புக்ள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காரைநகரை சேர்ந்த கனகசிங்கம் பத்மாவதி ஆகியோர் நினைவாக அவர்களது உறுவுகளால் ரூபா 1200000/- பெறுமதியான நிறையிலும் மேலதிகமாக தேவைப்பட்ட ரூபா 500000/- ம் நிதியை சந்நிதியான் ஆச்சிரமமும் வழங்கி ரூபா 1700000/- பெறுமதியில் குறித்த வீடு, மலசல கூடம் , மின்சார இணைப்பு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இதில் முன்னாளர் மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர் கலாநிதி செந்தில் குமரன், சந்நிதியான் சைவ கலை பண்பாடு பேரவை உறுப்பினர்களான சிவநாதன், தயாபரன், செ. ஞானசபேசன், சிறிகாந்தன், கு.தெய்வேந்திரம், மற்றும் தொண்டர்கள், வற்றாப்பளை கிராம அமைப்பு பிரதிவிதகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கனகசிங்கம் பத்மாவதி நினைவாக வற்றாப்பளையில் சந்நிதியான் ஆ்சிரமத்தால் வீடு கையளிப்பு...!-oneindia news

Exit mobile version