Home jaffna news கனடா மோகம்-வாழ்வை தொலைக்கும் யாழ்ப்பாணிஸ்-தூதரகம் அதிரடி முடிவு..?

கனடா மோகம்-வாழ்வை தொலைக்கும் யாழ்ப்பாணிஸ்-தூதரகம் அதிரடி முடிவு..?

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரியை நேற்றுச் சந்தித்து அதுகுறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறிப் பெருந்தொகைப் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கனடா அனுப்புவதாகக் கூறியே பெரும்பாலான பண மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பண மோசடிகள் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்தினவின் வழிகாட்டலில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தரவுகள், தகவல்களைப் பெற்றுக்கொண்ட தூதரக அதிகாரிகள், மோசடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

Exit mobile version