Home இலங்கை செய்திகள் கொழும்பில் அதிரும் துப்பாக்கி வேட்டுக்கள்-இன்றும் ஒருவர் பலி..!

கொழும்பில் அதிரும் துப்பாக்கி வேட்டுக்கள்-இன்றும் ஒருவர் பலி..!

இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கி சூடு – வெல்லே சாரங்கவின் உறவினர் டொன் சுஜித் பலி.

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இன்று (21) காலை 7.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது

Exit mobile version