Home கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் 140Kg கஞ்சா திருடிய 4 பேர் கைது

கிளிநொச்சி நீதிமன்றத்தில் 140Kg கஞ்சா திருடிய 4 பேர் கைது

கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்றையும் தினம் கைது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு
அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து
கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி பி.ஐ.மங்கள தலைமையிலான பொலீஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் இந்
நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர். இருவர் நீதிமன்ற சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள். கைதானவர்களில் மூன்று பேர் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். கைதான நீதிமன்ற பணியாளர் அம்பாறையை சேர்ந்தவர்.

நீதிமன்ற களஞ்சிய அறையை உடைத்து கஞ்சா திருடி, அதனை விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரினால் தடுத்து வைக்க கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இவர்களின் கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் 140Kg கஞ்சா திருடிய 4 பேர் கைது-oneindia news

Exit mobile version