கிளிநொச்சி செய்திகள்
Home கிளிநொச்சி செய்திகள்
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!
கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், டிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!
நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். […]
கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தர் ! நடந்தது என்ன ?
கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின் விடுவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் யுவதியொருவரும் அரச உத்தியோகத்தர் ஒருவரும் கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். இதன்பின் அதை பார்த்த சிலர் இருவரும் அலுவலகத்துக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளிவராததை தொடர்ந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைடுத்து அங்கு வந்த பொலிஸார் வெளியில் வருமாறு கூறியுள்ளனர். நபர் மட்டும் வெளியில் வந்து தன்னை ஒரு அரச உத்தியோகத்தர் என அடையாளப்படுத்திக்கொண்டார். மேலும் வேறு யாரேனும் உள்ளார்களா என கேட்டபோது தனது தோழி உள்ளார் எனவும் இந்த அலுவலகம் அவரது அலுவலகம் எனவும் மாலை நேரங்களில் அதில் அவல் ஓய்வு எடுக்க வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அத்தோழி மலசலக்கூடத்தை பயன்படுத்த வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் விசாரணைசெய்ததைத்தொடர்ந்து அப்பெண் 20 வயது மாணவி என தெரியவந்துள்ளது. […]
11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!{படங்கள்}
11 சிறிய குளங்களை இணைத்து பூநகரிக் குளமாக்குதலும் 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் மிகப்பெரிய திட்டம் நடைமுறைப்படுத்த மாவட்ட அபிவிருத்திக் குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. இன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலே மும்மொழியப்பட்டு அமைச்சரவை அனுமதித்த திட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 சிறிய குளங்களை ஒன்றாக இணைத்து பூநகரி குளம் அமைக்கப்படவுள்ளது. 2013ம் ஆண்டளவில் இத்திட்டம் நீர்பாசன திணைக்களத்தால் […]
வெள்ளை ஈ தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு..!{படங்கள்}
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இலங்கையில் தென்னைப் பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று (05) கிளிநொச்சி விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் தென்னை பயிர்செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். கலந்துரையாடலின் பின் பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு உத்தியோகத்தர்களால் மருந்து […]
கிளிநொச்சியில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட பெருமளவிலான மக்கள் வெள்ளம்..!{படங்கள்}
சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம்03.03.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் பொதுமக்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
கிளிநொச்சியில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட பெருமளவிலான மக்கள் வெள்ளம்
சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம்03.03.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கிளிநொச்சி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற...
தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}
சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பிரதேசத்தை சென்றடைந்தது. பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து சற்றுமுன்னர் சாந்தனின் பூதவுடல் அடங்கிய ஊர்தி கிளிநொச்சி நோக்கி நகர்கிறது. இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது. சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளது. இந்த […]
கிளிநொச்சி ராணுவ முகாம் மேல் விளையாட்டு காட்டிய யாழ் இளைஞன்-தூக்கிய பொலிசார்..!
அனுமதியின்றி டோன் கேமரா பறக்க விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது டோன் கேமரா பறக்க விட்டவர் கிளிநொச்சி பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது உடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தான் குறும்படம் ஒன்றை தயாரிப்பதற்காகவே டோன் கேமராவை பறக்க விட்டதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்று இளைஞன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இராணுவத்தினர் கிளிநொச்சி பொலீசாரருக்கு வழங்கப்பட்ட […]
கிளிநொச்சி ராணுவ முகாம் மேல் விளையாட்டு காட்டிய யாழ் இளைஞன்-தூக்கிய பொலிசார்..!
அனுமதியின்றி டோன் கேமரா பறக்க விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது டோன் கேமரா பறக்க விட்டவர் கிளிநொச்சி பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது...