Home jaffna news கிளிநொச்சி ராணுவ முகாம் மேல் விளையாட்டு காட்டிய யாழ் இளைஞன்-தூக்கிய பொலிசார்..!

கிளிநொச்சி ராணுவ முகாம் மேல் விளையாட்டு காட்டிய யாழ் இளைஞன்-தூக்கிய பொலிசார்..!

அனுமதியின்றி டோன் கேமரா பறக்க விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது டோன் கேமரா பறக்க விட்டவர் கிளிநொச்சி பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது உடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் குறும்படம் ஒன்றை  தயாரிப்பதற்காகவே டோன் கேமராவை பறக்க விட்டதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்று இளைஞன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இராணுவத்தினர் கிளிநொச்சி பொலீசாரருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்   கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version