பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான ‘வனாத்தே பிம்சர’ என்று அழைக்கப்படும் பிம்சர குணசேகர நேற்று (19) இரவு சுடப்பட்டார்.
பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் இலக்கு 38 வயதான ‘வனாத்தே பிம்சர’ எனவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வனாத்தே பிம்சர கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வனாத்தே பிம்சர ஒரு போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடலுார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், கடந்த 5 ஆம் திகதி பிணையில் வௌிவந்தார்.
மேலும், ‘வனாத்தே பிம்சர’ கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த குடியிருப்பில் தற்காலிகமாக வசிக்க வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.