நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவு காட்டுப்பகுதியில் இருந்து வெட்டிய மரங்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீதியை விட்டு விலகி ஞாயிற்றுக்கிழமை (18) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் குறித்த லொறியில் நானுஓயா பிரதான நகருக்கு செல்வதற்காக ஏறி வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் உயிரிழந்தவர் 58 வயதுடைய நானுஓயா டெஸ்போட் தோட்டம் வாழைமலை பிரதேசத்தைச் சேர்ந்த வடமலை மயில்வாகனம் என்பவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் .
விபத்திற்குள்ளான லொறியின் சாரதி ஆபத்தான நிலையிலும் , உதவியாளர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக லொறி வீதியில் இருந்து விலகி, விபத்துக்குள்ளாகி உள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.