ரன்ன கஹந்தமோதர பகுதியில் இன்று புதன்கிழமை (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கஹந்தமோதர பிரதேசத்தில் வசிக்கும் மீன்பிடிப் படகு ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது .
தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .