நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்க உள்ளதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதுமானதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில் நிர்மானத்துறையினை அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் செயற்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிய மற்றும் நடுத்தர துறைகளை மேம்படுத்துவதற்கும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் ஏனைய துறைகளையும் மறுசீரமைப்புக்குட்படுத்தி மக்களை வாழ்க்கை சுமையிலிருந்து மீட்பதற்கு அரசாங்கம் பாடுபட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்தவர்கள் தேர்தல்களை இலக்காகக் கொண்டு கொள்கையினை வகுத்தமையினால் நாடு பாரிய பொருளாதார அழிவிற்குள் தள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்