Home இலங்கை செய்திகள் ஊஞ்சல் கயிறு இறுக்கி பத்து வயதுச் சிறுவன் பலி

ஊஞ்சல் கயிறு இறுக்கி பத்து வயதுச் சிறுவன் பலி

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version