Home Uncategorized பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: உயர்நீதிமன்றில் 30 மனுக்கள் தாக்கல்.!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: உயர்நீதிமன்றில் 30 மனுக்கள் தாக்கல்.!

‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இதனை சபைக்கு அறிவித்த சபாநாயகர் மேலும் கூறுகையில்,

2024 சனவரி 23 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்கள் மற்றும் 2024 சனவரி 24 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட பதினெட்டு மனுக்களுக்கு மேலதிகமாகஇ அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் 6 மனுக்களின் பிரதிகள் எனக்குக் கிடைத்துள்ளன என்றார்.

Exit mobile version