Home இலங்கை செய்திகள் பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்..!

பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்..!

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி, விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த  (உயர்தரம் உட்பட) மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருந்தால், அதிபர்களால் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி நேர்காணல்கள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கல்வி அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

அத்துடன், பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கை  கடிதங்களை கல்வி அமைச்சு வௌியிடாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version