Home இலங்கை செய்திகள் மரம் விழுந்து குடும்பஸ்தர் பலி..!

மரம் விழுந்து குடும்பஸ்தர் பலி..!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று  விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இஸ்கோலவத்த எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version