Home இலங்கை செய்திகள் வீதியில் பெண்ணொருவரின் தாலிக் கொடியைப் பறித்து, தப்பியோட முயற்சித்த திருடர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

வீதியில் பெண்ணொருவரின் தாலிக் கொடியைப் பறித்து, தப்பியோட முயற்சித்த திருடர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

பொகவந்தலாவை பிரதேசத்தில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பியோட திருடர் இருவரை பொதுமக்கள் பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்கள், சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தை அறிந்த சிலர், ஆட்டோவில் மோட்டார் சைக்கிளை தூரத்திச் சென்றுள்ளனர்.

திருடர்கள் இருவரும், பலாங்கொடை வீதிக்கு செல்வது எவ்வாறு என்று கேட்டறிந்த பின்னர், தவறுதலாக தோட்டத்திற்கு செல்லும் வீதிக்குள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனால் பின்தொடர்ந்த பொதுமக்கள் திருடர்களைப் பிடித்து, நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சந்தேக நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Exit mobile version