Home இலங்கை செய்திகள் வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!

வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!

தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காலி கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version