Home crime news 9 வயதான ஒரே ஒரு மகளை தாயின் முன்பாகவே சீரழித்த காமுகன்

9 வயதான ஒரே ஒரு மகளை தாயின் முன்பாகவே சீரழித்த காமுகன்

குடும்பத்தின் ஒரே மகளான ஒன்பது வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய தந்தை வெயாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடந்த 10ஆம் திகதி அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெயாங்கொடை பலபோவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, தனது தந்தை தாயுடன் ஒரே அறையில் ஒரே படுக்கையில் உறங்குவது தெரிய வந்தது.

இந்த சமயத்தில் சிறுமி தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். தாயார் இதை கண்டும் காணாமலும் இருந்துள்ளார். கணவனின் மிரட்டலுக்கு அஞ்சி இதனை சகித்துக் கொண்டிருந்துள்ளார்.

சிறுமியின் கல்வியில் மிகவும் பலவீனமாக இருந்ததால், அதற்கான காரணத்தை அறிய தாய், சிறுமியை மருத்துவரிடம் பரிந்துரைத்த போது, ​​சிறுமி நடந்த சம்பவத்தை மருத்துவரிடம் கூறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வைத்தியர் வெயாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்