அம்பாறை செய்திகள்
Home அம்பாறை செய்திகள்
தமிழர் பகுதியில் விபத்து-மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!
அம்பாறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தின் போது பேருந்தில் ஏறக்குறைய 30 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த ஐந்து பாடசாலை மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை உதேனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்பாறையில் தந்தை ஒருவரின் கொடூர செயல்!
அம்பாறை மாவட்ட பெரிய நீலாவணை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மாற்றுத்திறனாளிகளான ஆண் பெண் ஆகிய இரு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டு முயற்சித்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (14) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை பொலிசார் தெரிவித்தனர். பெரிய நீலாவனை பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான 29 வயதுடைய முகமது கலீல் […]
கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு..!{படங்கள்}
கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட writ வழக்கு இன்று 2024.02.20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கௌரவ கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நாற்பத்தி ஆறு மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே. றாஸி முஹம்மட் மற்றும் சட்டத்தரணி […]
தமிழர் பகுதியில் வீடு ஒன்று தீக்கிரை-பதறி ஓடிய வீட்டார்..!{படங்கள்}
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் மீள குடியமர்ந்த பிரதேச சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று (25) காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளது. அதாவது தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன் தீப்பற்றிய வீட்டின் தீயை அணைக்க அயலவர்கள் போராடி தீயணைப்பை மேற்கொண்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் துரித நடவடிக்கையின் பயனாக விரைந்து வந்த […]
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}
அம்பாறை மாவட்டத்தில் தாயாக கரங்கொடுப்போம் கட்டம் இரண்டு முன்னெடுப்பு- தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டமானது “தாயாக கரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் பூராகவும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான இரண்டாம் கட்ட ற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது அண்மையில் இடம்பெற்றிருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் […]
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல்..!{படங்கள்}
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல். மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும். இந்த நிகழ்வில் […]
மற்றுமொரு மாணவனின் சடலமும் சற்று முன் மீட்பு..!{படங்கள்}
அம்பாறையில் நேற்றையதினம் கடலில் மூழ்கி மாயமான பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மாளிகைக்காடு – சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர். அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன. மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய […]
தமிழர் பகுதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் போனை விற்று காசு பார்த்த பொலிசார் ..!
அம்பாறை பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை குறித்த காவல்துறை உத்தியோகத்தர் 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சிறுவனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன் : தமிழர் பகுதியில் சோகம்!
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் (29.02) நீலாவணையில்( கல்முனை) இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு வயது பாலகனே உயிரிழந்துள்ளார் வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த குறித்த சிறுவன் , கேற் திறந்திருந்ததும் தற்செயலாக ரோட்டிற்கு ஓடி வந்துள்ளார் . அபோது பாதையால் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த வேன் சிறுவனை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் சிறுவன் ஸ்தலத்தில் […]
President Ranil accepted the revolutionary challenge to avoid mass casualties
29He said this while participating in the 'Smart Youth Club' program held yesterday (23) by Industry and Foreign Employment Minister Manusha Nayakkara Amparai that...