தெய்வீகம்

    Home தெய்வீகம்
    சந்நிதியான் ஆச்சிரமம் முல்லைத்தீவில் பல்வேறு உதவிகள்!{படங்கள்}-oneindia news

    சந்நிதியான் ஆச்சிரமம் முல்லைத்தீவில் பல்வேறு உதவிகள்!{படங்கள்}

    0
    யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்க்கு உட்பட்ட தண்டுவான் மகாவித்தியாலயத்திறக்கு அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குரிய மதிய உணவு வழங்குவதற்காக உணவுப் பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை சிவராத்திரி தின நிகழ்வை முன்னிட்டு நெடுங்கேணி வெடுக்குநாறி சிவாலயத்துக்கு அன்னதானப் பணிகளுக்காக உணவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐயனார் முள்ளியவளை குடியிருப்பு, 1ம் வட்டாரத்தை சேர்ந்த முள்ளியவளை கலைமகள் […]
    மாசிமக நன்னாளில் ஈழத்து கீரிமலை ஐயன் ஏறினான் கொடி..!{படங்கள்}-oneindia news

    மாசிமக நன்னாளில் ஈழத்து கீரிமலை ஐயன் ஏறினான் கொடி..!{படங்கள்}

    0
    பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின்  வடபால் அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் 07 ம் திகதி பெரிய சப்பறத் திருவிழாவும், மறுநாள் காலைஇரதோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்ச்சியும் இடம்பெற்று மறுநாளான 09 ம் திகதிதீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
    இளையோருக்கான தவக்கால திருயாத்திரை..!{படங்கள்}-oneindia news

    இளையோருக்கான தவக்கால திருயாத்திரை..!{படங்கள்}

    0
    மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை 23.02.2024 வெள்ளிக்கிழமை   நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்திருயாத்திரை நிகழ்வு மடு வீதியிலிருந்து ஆரம்பமாகி பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் 400 வரையான இளையோர் பக்தியுடன் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
    பிரதோஷத்துடன் இணைந்து வரும் அந்த பித்தனின் மஹா சிவராத்திரி-அரிய வரங்களை பெற்று கொள்ளும் யோகம்..!-oneindia news

    பிரதோஷத்துடன் இணைந்து வரும் அந்த பித்தனின் மஹா சிவராத்திரி-அரிய வரங்களை பெற்று கொள்ளும் யோகம்..!

    0
    மகா சிவராத்திரியானது, மார்ச் 08ஆம் திகதி வருகிறது. சிவராத்திரியானது, கிருஷ்ண பக்ஷ்த்தின் சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த தடவை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் என்னவென்றால், இந்த நாளில் சுக்ர பிரதோஷ விரதம் தற்செயலாக வருகிறது. இந்த பிரதோஷ விரதம் தவிர பல அரிய யோகங்களும் இந்நாளில் உருவாகிறது. இவ்வாறிருக்க இத்தகைய சூழ்நிலையில் இந்த தடவை மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால், நாம் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக […]
    தெல்லிப்பழை முத்துமாரியம்மனுக்கு மாசி மக இலாச்சர்சனை..!{படங்கள்}-oneindia news

    தெல்லிப்பழை முத்துமாரியம்மனுக்கு மாசி மக இலாச்சர்சனை..!{படங்கள்}

    0
    வரலாற்று சிறப்புமிக்க மாசி மக இலச்சார்ச்சனை உற்சவம் இன்று தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன . கருவறையில் அருள்பாலித்து விளங்கும் தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் எனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன் வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் முத்துமாரி யம்மனுக்கு மகா இலச்சார்ச்சனை உற்சவம் இடம்பெற்றது. இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
    புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்..{படங்கள்}-oneindia news

    புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்..{படங்கள்}

    0
    வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஶ்ரீவரசித்தி விநாயகருக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுடாக  வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
    நயினை பத்திரகாளியின் பூந்தண்டிகை ஊர்வலம்..!{படங்கள்}-oneindia news

    நயினை பத்திரகாளியின் பூந்தண்டிகை ஊர்வலம்..!{படங்கள்}

    0
      வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழாவின் பூந்தண்டிகைத் திருவிழா 19.02.2024 அன்று மாலை சிறப்பாக இடம்பெற்றது. இவ் தேவஸ்தானத்தின் திருவிழா கடந்த 15.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 23.02.2024 அன்று இரதோற்சவமும், மறுநாள் தீர்த்ததோற்சவமும் இடம்பெற்று, அன்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவடையும். இவ் ஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலை மையிலான […]
    திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வு குறித்து ஆராய்வு..!{படங்கள்}-oneindia news

    திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வு குறித்து ஆராய்வு..!{படங்கள்}

    0
    மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (29) மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் ராமகிருஷ்ணன்,திணைக்கள தலைவர்கள்,ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்,இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர். இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற […]
    கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}-oneindia news

    கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}

    0
    கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.திருப்பலி நிகழ்வு நாளை(24) காலை  ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவிற்கு பெருமளவு  பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு..{படங்கள்}-oneindia news

    கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு..{படங்கள்}

    0
    இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில்  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று  இடம்பெற்றன. வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு நாளை காலை 7 மணிக்கு  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து  4354 பக்தர்கள்  கலந்து […]

    RECENT POST