crime news
வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிப்பு.
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 1:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோர் குண்டு வீசி தீயிட்டு எரித்து வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் தமது வீட்டை உடைத்து மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். […]
வாடகை அறைக்குள் பெண்ணின் சடலம்!
வாடகை அறை ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பலுகொல்லாகம – மெகொடவெவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. நேற்றிரவு (14) திருமணமாகாத இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, குறித்த இளைஞன் போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் […]
அம்பாறையில் தந்தை ஒருவரின் கொடூர செயல்!
அம்பாறை மாவட்ட பெரிய நீலாவணை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மாற்றுத்திறனாளிகளான ஆண் பெண் ஆகிய இரு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டு முயற்சித்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (14) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை பொலிசார் தெரிவித்தனர். பெரிய நீலாவனை பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான 29 வயதுடைய முகமது கலீல் […]
இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை – வெளியான சி.சி.டிவி காட்சி!
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்டார். கடத்தி சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறை கும்பல் தப்பி சென்று இருந்தது. வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து ,தாக்கி கடத்த முற்பட்ட வேளை , தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டினர் […]
நான்கு பிள்ளைகளின் தந்தை கொடூர கொலை..!
வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரவல, பெலகடியாகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பெலகட்டியாகொட பகுதியைச் சேர்ந்த தரிது தனஞ்சய என்ற 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துளள்து. தாக்குதல் நடத்தியவர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிளை […]
கடந்த இரு மாதங்களில் 83 பேர் கொலையா-சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் இவ்வருடம் இரு மாத காலப் பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1,180 திருட்டு சம்பவங்களும் 310 கொள்ளைச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாத காலப்பகுதிக்குள் 20 துப்பாக்கி சூட்டுச் […]
83 கொலை சம்பவங்கள் – சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த...
பழைய தகராறு முற்றியதில் 20 வயது இளைஞன் துடிதுடிக்க அடித்து கொலை..!
பழைய தகராறு ஒன்றை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இளைஞன் ஒருவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
ஹபராதுவ கஹவெனகம அம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (26) இச்சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த தரப்பினர் இளைஞனை தடி உள்ளிட்ட...
தவறான உறவால் ரத்தவெள்ளத்தில் மிதந்த பெண்
வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் தவறான உறவால் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல்...
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யுவதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு
கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...