Trincomalee news
13 வயதில் பாக்கு நீரிணையை கடந்து வரலாற்று சாதனை
13 வயதில் பாக்கு நீரிணையை 8 மணித்தியாலம் 15 நிமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை புரிந்த தன்வந்த்க்கு பாராட்டுக்கள்.
தமிழர் பகுதியில் மற்றுமொரு சோகம் தாமரை பூ பறிக்க சென்ற இளைஞன் பலி..!
திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை நண்பருடன் தாமரைப் பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கியதுடன் நண்பனை காப்பாற்ற முடியாத நிலையில் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு […]
திருமரையில் சைவ ஆலய வழிபாட்டை தடுத்து நிறுத்திய முப்படையினர்..!
திருகோணமலை முருகன் ஆலயத்தில் பூஜை வழிபடுகளை நடத்துவதற்கு முப்படையினர் தடைவித்துள்ளனர். மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு திருகோணமலை, தென்னமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் இடம்பெறுவது வழமை. இவ்வாறான நிலையில், இம்மாத பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்களே, முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த முருகன் ஆலயப் பகுதி பௌத்த விகாரைக்கு உரியது எனவும் நீநிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தே பெதுமக்கள் முப்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் […]
மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் பகுதியிலும் கோர விபத்து-பெண் பலி-பலர் காயம்..!{படங்கள்}
நேற்று மாலை திருகோணமலை கண்டி பிரதான வீதியின் கித்துள் ஊற்று பகுதியில் வேனும் ,டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரணையிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற வான், எதிர் திசையில் வந்த மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், காயமடைந்த […]
திருமலையில் 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
திருகோணமலை – மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியில் நேற்று (20) மாலை பாம்புக் கடிக்கு இலக்கான 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்ணா மெல்ல போங்க என்ற பெண்ணை நடு வீதியில் இறக்கிய அரச பேரூந்து சாரதி-தமிழர் பகுதியில் சம்பவம்..!{காணொளி}
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் […]
தமிழர் தலைநகரில் புலிகள் புதைத்து வைத்த பொருட்கள் மீட்பு..!{படங்கள்}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் களப்புக் கடலோரத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட சில உபகரணங்களை மூதூர் பொலிஸார் இன்று(17) காலை மீட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கமரா -01, கமரா பெட்டரி -01, சீடி பிளேயர் -01, ட்ரோன் கமராவை இயக்கும் கொன்றோலர் -01 என்பன புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் […]
திருமலை கின்னியா பகுதியில் வரவுள்ள பாரிய மாற்றம்..!
திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல்..!{படங்கள்}
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல். மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும். இந்த நிகழ்வில் […]