Home Accident news பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!

பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!

பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

 

இதற்காக பெருமளவான பக்தர்கள் தமது படகுகளில் ஆலயத்திற்கு சென்றனர்.

 

இதன்போது சென்ற இரண்டு படகுகள் மோதுண்ட விபத்தில் காயமடைந்த எழு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version