கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சமீபத்தில் திருமணமான இவரும் இவரது மனைவியும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரம் விநியோகம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.