Home Accident news சற்று முன் நேர்ந்த கோர விபத்து-இளைஞன் பலி..!

சற்று முன் நேர்ந்த கோர விபத்து-இளைஞன் பலி..!

கலன்பிந்துனுவெவ – கதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் சிகிச்சைக்காக கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராஜாங்கனை தெற்கு பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் செலுத்திய சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version